திருவாரூர் கடை வீதியில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி போக்குவரத்துக்கு பயன்பாடற்ற சூழலை ஏற்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?