சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2023-01-22 10:22 GMT

திருவாரூர் துர்க்காலயா சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக விளங்குகிறது. இந்த சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை குழியின் அருகே பள்ளம் ஒன்று உள்ளது. இதனை அறியாமல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்