கிருஷ்ணகிரியில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி அருகில் சாலையில் இருபுறமும் லாரிகள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. சில லாரிகளை சாலையோரமாக நிறுத்தாமல் நடுவில் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த விபத்துகளை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?