பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை முன்புறமுள்ள சர்வீஸ் ரோட்டில் பதிக்கப்பட்ட புதைவட மின்கம்பிக்கான கான்கிரீட் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அதன் அருகில் உள்ள பாதாள சாக்கடை குழாய் மூடியும் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.