மேல்மலையனூர் அருகே பழம் பூண்டி கூட்டு சாலையிலிருந்து பறையந்தாங்கல் வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.