பெங்களூரு கனகபுரா ரோடு அஞ்சனபுரா லே-அவுட் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சில இடங்களில் சாலைகள் பாதி அளவுக்கு காணாமல் போய் உள்ளது. அந்த சாலைகளில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி. சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது. மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வருவார்களா?