பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பழைய மெட்ராஸ் ரோட்டில் அமைந்து இருக்கிறது. மிகவும் பரபரப்பான அந்த சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் அந்த மாநகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள சாலையில் சில இடங்களில் பள்ளம் விழுந்து உள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளதால் பள்ளங்களை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.