இருகூர் மேம்பாலத்துக்கு கீழே உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்யும்போது அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாய் திறந்து கிடக்கிறது. அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைத்து, சாக்கடை கால்வாயை மூடி வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.