மண்குவியல் அகற்றப்படுமா?

Update: 2022-07-19 09:46 GMT
கூடலூர் கிளை நூலகத்தின் முன்பு உள்ள நகராட்சி நடைபாதையில் கடந்த வாரம் மண் சரிவு ஏற்பட்டு நடைபாதையில் பொதுமக்கள் மாணவ மாணவிகள் நடக்க முடியாத வகையில் மண் குவியல்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் இதுவரை மண்குவியல்கள் அகற்றப்படவில்லை. இது சம்பந்தமாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் காலை மாலை நேரத்தில் மாணவ மாணவிகள் நடைபாதையில் நடக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர் எனவே உடனடியாக மண்குவியல்களை அகற்ற வேண்டும்.

மகேந்திரன், கூடலூர்.

மேலும் செய்திகள்