நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல ஆசாரிபள்ளத்தில் மேல தெருவில் உள்ள காங்கிரீட் தளம் உடைந்துள்ளது. இதனால் தெருவில் மக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் இந்த தெருவில் கழிவுநீரோடையும் சேதமடைந்து உள்ளதால், சீராக கழிவுநீர் செல்வதில்லை. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காங்கிரீட் தளத்தையும், கழிவுநீர் ஓடையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.