பயணிகள் நிழற்குடை

Update: 2023-01-08 16:47 GMT

தர்மபுரி நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக 4 ரோடு அமைந்துள்ளது. இங்கு சேலம் சாலை மற்றும் கிருஷ்ணகிரி சாலையில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் காலை முதல் இரவு வரை சாலை ஓரத்தில் பஸ்களுக்காக காத்திருக்கிறார்கள். வெயில் மற்றும் மழை காலங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்