தென்காசி ஹவுசிங் போர்டு காலனி மெயின் ரோட்டில் வேகத்தடை உயரமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்களின் அடிப்பகுதியில் வேகத்தடை மோதுவதால் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடையின் உயரத்தை குறைப்பதற்கும், அனுமதியின்றி வைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்றுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.