பெங்களூரு கன்டோன்மெண்ட் ரெயில் நிலையம் வழியாக செல்லும் சாலையோரம் பள்ளம் விழுந்து உள்ளது. அந்த பள்ளத்தின் முன்பு சிறிய கல்லையும், அதன் மீது செடியையும் வைத்து உள்ளனர். ஆனால் தொலைவில் இருந்து பார்க்கும் போது சாலையில் பள்ளம் விழுந்து இருப்பது தெரியவில்லை.
அருகில் வந்த பிறகு தான் வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரிகிறது. இந்த பள்ளத்தால் விபத்து நடக்கவும் வாய்ப்பு உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.