சாலையின் அவல நிலை

Update: 2023-01-04 15:29 GMT

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சில சமயங்களில் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடிவது இல்லை. இதற்கு காரணம் ஒயிட்பீல்டு மெயின் சாலையின் அவல நிலை தான்.

அந்த சாலையில் பல்வேறு இடங்களில் குழி விழுந்து உள்ளது. மேலும் சாலையும் பெயர்ந்து உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவல நிலையில் காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்