கோத்தகிரி அருகே உள்ள ஒன்னதலை கிராமத்திற்கு செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.