கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-04 12:07 GMT
தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் தார் சாலையின் பக்கவாட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயின் பக்கவாட்டு சுவர்கள் சில இடங்களில் சேதம் அடைந்து உடைந்து காணப்படுகின்றன. இதேபோல் இந்த கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் கழிவுநீர் சீராக வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைத்து முறையான பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பன்,தர்மபுரி.

மேலும் செய்திகள்