விழுப்புரம் தாலுகா சாலை அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவநாதசுவாமி நகரில் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி நிற்பதால் அதில் நான்கு சக்கர வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு புதி்தாக சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.