தர்மபுரி மதிகோன்பாளையம் ரவுண்டானா அருகே அரூர், திருப்பத்தூர் செல்லும் சாலைகள் இணைகின்றன. இந்த பகுதியில் சில இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்பவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.