பெங்களூருவில் குண்டும், குழியுமாகவும், சேறு, சகதியுமாக காட்சி அளித்து வரும் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும் ஒரு சில இடங்களில் சேறு, சகதியுமான சாலைகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக பெங்களூரு பெல்லத்தூர் பகுதியில் உள்ள சாலைகளை கூறலாம். பல மாதங்களாக சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது எப்போது?.