பெயர்ந்து கிடக்கும் சாலை

Update: 2023-01-01 15:01 GMT
பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் 9-வது மெயின் ரோட்டில் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் பூமிக்கு அடியில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்ள ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் குழாய் பதிக்கும் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் சாலை பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளதால் சாலைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்