சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-01 14:40 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டும்,குழியுமான சாலையினால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்