நாகை மாவட்டம் நாகூர் பகுதி சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், சாலையில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் மூடப்படாமல் உள்ளன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.