கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் எமக்கல்நத்தம் செல்லும் வழியில் சின்ன பர்கூரில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக பல்வேறு கிராம பகுதிகளுக்கு தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்களும், நகர பஸ்களும் சென்று வருகின்றன. இந்த சாலை சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். எனவே சேதமடைந்துள்ள இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.