விழுப்புரம் கோலியனூர் கூட்டுரோடு வழியாக செல்லும் கள்ளிப்பட்டி-கண்டரக்கோட்டை வரை உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், சாலை பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.