பெங்களூரு இந்திராநகர் டிபன்ஸ் காலனி, 100 அடி ரோட்டில் மாநகராட்சி சார்பில் டெண்டர்சூட் சாலை அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலை அமைக்கும் பணிகளை வேகமாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.