சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-28 14:33 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள முக்குராந்தல் பகுதி சாலை, நான்கு வழிச்சாலையில் படந்தால் சந்திப்பு சாலை ஆகியவை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சாலைகளை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்