செஞ்சி தாலுகா மீனும்பூர் கிராமத்தில் பள்ளியம்பட்டு தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அவ்வழியாக வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இதன் காரணமாக அடிக்கடி அப்பகுதியில் விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே கிராம மக்கள் நலன் கருதி அப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.