சேறும், சகதியுமான சாலை

Update: 2022-12-25 17:27 GMT

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா பச்சைமலை ஆத்திநாடு ஊராட்சி சின்ன மங்களம் மலைக்கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மங்களம் அருவி. இந்த அருவிக்கு செல்லும் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே இந்த மண் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்