திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் விஸ்வநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.