கழிவுநீர் குழிகள் மூடப்படுமா?

Update: 2022-12-25 14:22 GMT

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி கடைவீதி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதன்காரணமாக சாக்கடை கழிவுநீர் குழிகளின் மூடிகள் திறக்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால் பணிகள் முடிந்த பிறகும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதிமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கழிவுநீர் குழிகளை மூட நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்