சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-18 13:38 GMT
சாலை சீரமைக்கப்படுமா?
  • whatsapp icon

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ெரயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள தார் சாலை சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்க படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் மழை பெய்தால் நீரானது தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மேலும் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்து வரும் இந்தச்சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்