நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2022-12-21 13:29 GMT
தர்மபுரி நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக 4- ரோடு பகுதி உள்ளது. இங்கு உள்ள சேலம் சாலை மற்றும் கிருஷ்ணகிரி சாலையில் காலை முதல் இரவு வரை ஏராளமான பயணிகள் சாலையோரத்தில் பஸ்களுக்காக காத்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்க முடியவில்லை. எனவே பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி இந்த பகுதிகளில் இருக்கை வசதியுடன் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், தர்மபுரி.

மேலும் செய்திகள்