சாத்தான்குளம் அருகே புளியங்குளம் விலக்கில் இருந்து புளியங்குளம் ஊருக்குள் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சுமார் 1½ கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை முழுவதும் ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.