சேலம் மாவட்டம் கெங்கவல்லியிலிருந்து வேம்படி பாலக்காடு சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். அங்கிருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் தான் நல்லமாத்தி மலைக்கிராமம் இருக்கிறது. நல்லமாத்தி செல்ல வேண்டும் என்றால் தம்மம்பட்டி வழியாக டாப் செங்காட்டுப்பட்டி 56 கிலோ மீட்டர் சென்று அங்கிருந்து 17 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். நல்லமாத்தி மலைக் கிராமத்தில் தான் பொது மக்களுக்ககான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனால் வேம்படி பாலக்காடு முதல் நல்லமாத்தி வரை புதிய தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.