பாரதப்பள்ளியிலிருந்து வெள்ளாங்கோடு செல்லும் சாலை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்க படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தயவு கூர்ந்து என் கோரிக்கையை உங்கள் தினத்தந்தி நாளிதழில் வெளியிட்டு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல கேட்டுக் கொள்கிறேன்.