காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குமராட்சி, சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.