திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அப்துல்ரகுமான் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து ஆஸ்பத்திரி சாலை, சின்னகூத்தாநல்லூர் சாலை, லெட்சுமாங்குடி கடைவீதி சாலை, கூத்தாநல்லூர் சாலை ஆகிய பிரிவு சாலைகள் இணைகின்றன. இதன்காரணமாக அந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?