திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி உள்ளிக்கோட்டை ஊராட்சி வடக்குதெரு ஆற்றங்கரை சாலை பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சாலை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?