விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?