புதர்மண்டி கிடக்கும் பாதயாத்திரை பாதை

Update: 2022-12-14 16:47 GMT
திண்டுக்கல்-பழனி இடையேயான சாலையில், இடதுபக்க ஓரம் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை பேவர்பிளாக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் தைப்பூச சீசன் தொடங்க உள்ளது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்வார்கள். ஆனால் பாதயாத்திரை பாதை பல்வேறு இடங்களில் புதர்மண்டி கிடக்கிறது. எனவே அவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்