கயத்தாறு தாலுகா ஓணமாக்குளம் தெற்கு தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டினர். பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.