பண்ருட்டி ஒன்றியம் பணிக்கன்குப்பம் கிராமத்தில் இருந்து பண்ருட்டி நகரம் வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆகவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.