ஆற்றூர் பேருராட்சிக்கு உட்பட்ட புளியமூடு சந்திப்பில் இருந்து சற்று தொலைவில் வலதுபுறம் திருநிழல்தாங்கல் அருகில் ஏற்றக்கோடு செல்லும் சாலை குண்டும் குழியுமாகும் உள்ளது. மேலும் இந்த சாலையில் கட்டப்பட்டுள்ள பக்க சுவர் இடிந்து விழுந்த வண்ணம் காணப்படுகிறது. இந்த வழியாக தினமும் பள்ளி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் சாலையில் மண் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சாலையில் பக்க சுவரை சீரமைத்து சாலைைய செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.