தர்மபுரி டவுன் பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலை சில இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த பகுதிகளில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.