கோவைப்புதூர்-புட்டுவிக்கி ரோடு குனியமுத்தூர் பிரிவு அருகே சாலையில் அபாய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையில் ஏற்பட்ட அபாய பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.