பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜ் பகுதியில் ராமேஸ்வரா கோவில் அருகே உள்ள சாலையின் நடுவே அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது. அந்த பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை சரிசெய்துவிட்டனர். எனினும், சில நாட்களில் அந்த இடத்தில் பள்ளம் விழுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்துவிட்டு மீண்டும் அங்கு பள்ளம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.