திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதி பாபநாசம் மெயின் சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நடந்து வரும் சாலை பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?