சாலை புதுப்பிக்கப்படுமா?

Update: 2022-12-04 10:12 GMT

தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த தொ.காணிகரஅள்ளி அருந்ததியர் தெருவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.  அந்த சாலைகள் தற்போது மிகவும் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடாகி உள்ளது. இந்த சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகளும் தண்ணீர் எடுக்கச்செல்லும் பெண்களும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக தார்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்