திருவட்டார் அருகே புத்தன்கடையில் இருந்து விளாக்கோடுக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர் அடிக்கடி விபத்திலும் சிக்கி உள்ளனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.சுனிதா, விளாக்கோடு.