வழிகாட்டி பலகை தேவை

Update: 2022-12-04 07:27 GMT

கன்னியாகுமரியில் இருந்து ஈத்தங்காடு வழியாக நாகர்கோவிலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. பொற்றையடியில் இருந்து ஒற்றை சாலையாக சென்று ஈத்தங்காட்டில் மூன்று சாலைகளாக பிரிகிறது. இதில் ஒரு பிரிவு சாமிதோப்புக்கும், மற்ற இரண்டு பிரிவு சாலைகளும் நாகர்கோவிலுக்கு செல்கிறது. ஆனால், அந்த பகுதியில் வழிகாட்டி பலகை அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த சந்திப்பு பகுதியில் வழிகாட்டி பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்